பெரம்பலூர், ஆக.5- பெரம்பலூர் ஆட்சியர் அலுவல கத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில் சிஐடியு பெரம்பலூர் அரியலூர் மாவட்டக்குழு சார்பில் கோரிக்கை மனு வினை ஆட்சியர் வே.சாந்தாவிடம் அளித்தனர். அம்மனுவில், பெரம்ப லூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் உடும்பியம் கிராமத்தில் இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலை பிரைவேட் நிர்வாகத்தில் தொழிலா ளர்களுக்கு ஊதிய உயர்வு, சீருடை, காலணிகள், போனஸ் உள்பட பல் வேறு சலுகைகள் வழங்கப்படவில்லை. மேலும் தொழிலாளர் சங்கம் பதிவு செய்து விபரங்களை நிர்வாகத்திற்கு தெரிவித்ததன் அடிப்படையில் ஆலை யில் பணி செய்த 5 நபர்களை சர்க்கரை ஆலை தொழிலுக்கு சம்பந்தமில்லாத தூத்துக்குடி நிறுவனங்களுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். எனவே 16.3.2019 அன்று இடமாற்ற உத்தரவை ரத்துசெய்யக்கோரி ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டதை தொடர்ந்து அன்று நடை பெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு காணப்படும் என்று நிர்வாகம் ஒத்துக் கொண்டது. இது சம்பந்தமாக திருச்சி தொழிலா ளர் ஆணையர் அவர்களிடம் மன தாக்கல் செய்யப்பட்டு ஆலை நிர்வா கத்திற்கு அறிவுரையும் வழங்கப் பட்டது. ஆனால் இதுநாள்வரை அதற்கு மாறாக செயல்பட்டு வருவ தோடு 5 பணியாளர்களிடமும் தொழிற் சங்கத்தை விட்டு விலகுகிறேன் என நிபந்தனைக் கடிதம் கேட்டு தொழி லாளர் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிப்பதோடு அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. எனவே ஆட்சியர் தலையிட்டு சுமூக தீர்வு காண நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.