tamilnadu

img

மின்சார திருத்தச் சட்டத்தை கைவிடுக! அனைத்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மே 26- மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தி னர், பெரம்பலூர் ஆட்சியர் அலுவல கம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமை வகித்த னர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீ. ஞானசேகரன், கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.இராஜேந்திரன், விதொச பி.ரமேஷ், சக்திவேல் முன்னிலை வகித்தனர்.  பின்னர் ஆட்சியரிடம் அளித்த மனுவில், முன்னாள் முதல்வர் ஜெய லலிதா இருந்த போது உதய் மின் திட்டத்தை ஏற்க மாட்டோம் என உறுதியாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரது மறைவிற்கு பிறகு வந்த எடப்பாடி அரசு அதனை ஏற்றுக் கொண்டது.

அதன் விளை வாக இலவச மின்சாரம் ரத்து மற்றும் தமிழக மின் வாரியம் தனியார் மயம் என்கிற எண்ணம் மத்திய அரசிற்கு வலுவாகி விட்டது.  தற்போது தமிழகம் கடன் பெறுவதற்கான உச்சவரம்பை தளர்த்த வேண்டுமானால் மினி விநி யோகம் தனியார்மயமாக்க வேண்டும். உடனடியாக ஓரிரு மாவட்டங்களிலாவது செயல் படுத்த வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளது. இதனை கண்டித்து தமிழக அரசு, விவசாயிகள் நலன் காக்க தகுந்த அரசாணைகளை வெளியிட வேண்டும்.  தமிழக விவசாயிகள் பயன் படுத்தி வரும் ஆழ்குழாய் கிணறுக ளில் குதிரை திறன்கொண்ட மின் மோட்டாரால் நீரை கொண்டு வர முடியவில்லை. எனவே கூடுதல் திறன் கொண்ட மின் மோட்டாரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது மின்வாரியத்திற்கு தெரியும். இருந்தும் கூடுதல் குதிரை திறன் மின் மோட்டாருக்கு ரூ.20 ஆயிரம் ஜூன் மாதம் 30 க்குள் செலுத்த அர சாணை வெளியிட்டதை ரத்து செய்து குதிரை திறனை கணக்கி டாமல் மின்சாரத்தை இலவசமாக வழங்கிட தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

 அனைத்து வகையான விவசாய மின் இணைப்புகளுக்கும் மீட்டர் பொருத்தப்பட மாட்டாது என தமிழக முதல்வர் அறிவித்தி ருப்பதை அரசாணையாக வெளி யிட வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலு விலக்கச் செய்யும் விதத்தில் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வதை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.  இந்த கோரிக்கைகளை, மத்திய மாநில அரசுகள் ஏற்காவிடில் அனைத்து விவசாயிகளையும் திரட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அனைத்து விவ சாயிகள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கம்யூனிஸ்ட் கட்சி எஸ்.அகஸ்டின், பி.கிருஷ்ணசாமி, பால் உற்பத்தியாளர் சங்கம்  இராமச்சந்திரன், அம்மாபாளை யம் சதீஸ்குமார் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.