பெரம்பலூர், ஜூலை 21- பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க மறுப்பதாகக் கூறி அப்பகுதி மகளிர் சுய உதவிக்குழுவினர் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்க பெரம்பலூர் மாவ ட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரி க்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், குரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிரந்தர போர்டு நிர்வாகம் அமையும் வரை தனி அலுவலரை நியமித்து தனி அலுவலரின் கட்டுப்பாட்டில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொது மக்களுக்கு உடனடி சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் அரசு அறி வித்தவாறு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பி னருக்கு தலா ரூ. 5 ஆயிரம் முதல் குழு விற்கு ஒரு லட்சம் வரை கடன் வழங்க வேண்டும்.
வழக்கம் போல் நகைக்கடன் வழங்கு வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். கொ ரோனா காலத்தில் மக்கள் வறுமையில் உள்ள தால் நுண்நிதிக்கடன், தனியார் நிதி நிறு வனக் கடன், கூட்டுறவுக்கடன் ஆகிய வற்றை கட்டாயப்படுத்தி வசூல் செய்வதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமப்புற மக்களோடு நேர டியாக சேவை செய்யும் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வ தை வாபஸ் பெற வேண்டும், கூட்டுறவு கடன் சங்கங்கள் கிராமப்புற மக்களுக்கு நேரடி யாக சேவை செய்வதை தமிழக அரசு உறு திப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.செல்லதுரை, மாதர் சங்க நிர்வாகி எ.கலையரசி, சிபிஎம் உறுப்பினர் எம்.கருணா நிதி, செல்லமுத்து உள்பட மகளிர் சுய உத விக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.