tamilnadu

img

பெரம்பலூர், திருச்சியில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், செப்.7- பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சிஐடியு  பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் துக்கு, மாநிலச் செயலர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். சங்க பொறுப்பா ளர்கள் கே.குமாரசாமி, பி.நாராயணன், எஸ். காசிநாதன், எஸ்.புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலர் எம்.பன்னீர்செல்வம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  ஆர்ப்பாட்டத்தில், தமிழக மின்வாரிய மறு சீரமைப்பு, மின் விநியோக சட்ட திருத்த மசோதா 2018-ஐ கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டன. ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பைச் சேர்ந்த உறுப்பி னர்கள் பலர் பங்கேற்றனர். இதே போல் மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டக்கிளை சார்பில் மன்னார்புரம் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு மாநில துணைத்தலைவர் ரெங்க ராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி வட்ட செயலாளர் செல்வ ராசு, பொருளாளர் இருதயராஜ், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல் வம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற் றோர் நல அமைப்பு மாநில துணைத்தலை வர் பஷீர் ஆகியோர் பேசினர். பழனியாண்டி, செல்வம், ரவிச்சந்தி ரன், செல்வம், ரியாஜூதீன், அந்தோணி சாமி, சுப்ரமணியன், தர்மலிங்கம், நாக ராஜன், மணிகண்டன், ராதா உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நகர கோட்ட செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.