பெரம்பலூர், டிச.28- தமிழ்நாடு மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்கள் டான்ஜெட் கோ மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் இணைய வழியாக விண் ணப்பம் செய்தவர்கள் உடற் தகுதி தேர்விலும், எழுத்துத் தேர்விலும் எளிதாக வெற்றி பெற சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்ப லூர் வட்டக்கிளை சார்பில் பெரம்ப லூர்-அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு அறிவித்திருந்தது. ஆர்வமுடன் இந்த பயிற்சி வகுப்பில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முதற் கட்டமாக மின்வாரியத்தில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சிஐடியு சங்கத்திற்கு நன்றி தெரிவித்து பாராட்டியதோடு எழுத்துத் தேர்விற் கும் பங்கேற்று வெற்றி பெற ஏதுவாக பயிற்சி வகுப்பு நடத்த கோரிக்கை விடுத்தனர். அதற்கான பயிற்சி வகுப்பு சனியன்று துறைமங்கலத்திலுள்ள சிஐடியு அலுவலகத்தில் துவக்கப் பட்டது. மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கே.குமாரசாமி, பி.நாரா யணன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநில தலைவர் ஜெய்சங்கர் துவக்கி வைத்து மின்சார கருவி பாதுகாப்பு நடவடிக்கை, முதலுதவி உள்ளிட்ட பாடத் திட்டம் குறித்து விளக்கவுரை ஆற்றினார். வட்டச் செயலாளர் எம்.பன்னீர் செல்வம், பொருளாளர் கே.கண் ணன், துணைத்தலைவர் வி.தமிழ்ச் செல்வன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். ஜெ.ஆல்பர்ட் அருமை ராஜ், எஸ்.வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பானது பிப்ரவரி மாதம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழ மை நடைபெறும். இறுதியில் மாதிரித் தேர்வு நடத்தி பயிற்சி வகுப்பு நிறைவு பெறும். மேலும் இந்த எழுத்துத் தேர் வில் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் பணி நியமணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.