பாட்னா:
பீகார் மாநிலத்தில் ஐக்கியஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ்குமார் இருக்கிறார். பாஜகவைச் சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல்வராக இருக்கிறார். மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்திஉள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இதில் பீகார் மாநிலத்திற்குள் லோக் ஜனசக்தி கட்சியின் விவகாரங்களை ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான்தான் கவனித்து வருகிறார். அவர் மக்களவை உறுப்பினராகவும் இருக்கிறார்.
இந்நிலையில், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக, சிராக் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார். “நீதீஷ்குமார் கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை. எனவே, தனதுமுதல்வர் பதவியை அவர் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’என பீகார் மாநில பாஜக தலைவர்கள் ஏற்கெனவே கலகத்தில்ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், “நடைபெறஇருக்கும் பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் தலைவர் என்பதைபாஜகதான் முடிவு செய்யும்’’என்று சிராக் பஸ்வானும் தன்பங்கிற்குத் திரியைக் கொளுத்திப் போட்டுள்ளார். இது பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்குள் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.