tamilnadu

img

தானியங்கள், பருப்பு, எண்ணெய் விலை கடுமையாக உயரும் ஆபத்து

தீர்மானிக்கும் அதிகாரம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு!

விவசாயிகள் போராட்டத்துடன் கைகோர்க்கும் பெண்கள்

சென்னை, ஜுன் 8 - அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாடு களை தளர்த்தும் அவசர  சட்டத் திருத்ததிற்கு எதிராக  விவசாயிகள் சங்கம் நடத்தும் நகல்  எரிப்புப் போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கமும் பங்கெடுக்கிறது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டம்  1955-ல்  பல திருத்தங்களை செய்து அதை அவசர சட்டமாக ஜூன்-5 ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது.  அதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மீது கடுமையான தாக்குதலை அரசு  தொடுத்துள்ளது. 

வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம்- 2020 மற்றும் விவசாயி களுக்கான விலை உத்தரவாதம் மற்றும் சேவை கள் மீதான விலை உத்தரவாத சட்டம் -2020 ஆகிய இரண்டு சட்டங்களின் மூலம், விவசாயி களை பாதுகாப்பதிலிருந்து அரசு தவறியுள்ளது.   இச்சட்ட திருத்தத்தின் மூலம் விவசாயிகள் என்ன பயிரிட வேண்டும் என்ன விலைக்கு விளைபொருட் களை விற்க வேண்டும் என்பதை கார்ப்பரேட் நிறு வனங்கள் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கு கிறது. இது விவசாயிகளுக்கு தங்கள் நிலங்களின் மீது இருந்த அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது.

எல்லாவற்றையும் கார்ப்பரேட் கம்பெனிகளே தீர்மானிக்கும்

கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய பொருட் களையும், அத்தியாவசிய பொருட்களையும் மலி வான விலைக்கு வாங்கி பதுக்கி வைத்துக்கொண்டு செயற்கையான தட்டுப்பாட்டை  ஏற்படுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பளிக்கிறது. விலையையும் கார்ப்பரேட் நிறுவனங்களை தீர்மானிக்கும் அனுமதியையும் வழங்குகிறது. இந்த அவசரச் சட்டம் அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளது .இதன்  மூலம் அத்தியாவசிய பொருட்களான  தானி யங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற  பொருட்களின் விலை கடுமையாக உயரும் ஆபத்து உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் குறிப்பாக பெண்கள் கடும் பாதிப்புக்குள்ளா வார்கள்.

நோய்த்தொற்று அதிகரித்துள்ள இச்சூழலில் வருமான இழப்பு ஏற்பட்டு மக்கள் வாழ்வதற்கே பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளனர்.  மேலும் இந்த அவசர திருத்த சட்ட முடிவானது நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கூட கேட்கா மல் ஜனநாயக விரோதமாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் எடுக்கப்பட்ட முடிவாகும். நோய்த் தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை பல உலக நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வரு கின்றன. ஆனால் மத்திய பாஜக அரசு  மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள் வதற்குப் பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுவதை  இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே இச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு  தழுவிய போராட்டத்தை நடத்த வேண்டும்  என்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மத்திய குழு அறைகூவலுக்கு ஏற்ப, தமிழகத்தில் ஜூன் 10 அன்று மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் நடத்த இருக்கும் நகல் எரிப்புப்  போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்   பங்கேற்பது என முடிவெடுக்கப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்  போராட்டங்களில் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாயக மாதர் சங்க சகோதரிகள் பெரும் திரளாய் கலந்து   கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.