tamilnadu

img

50 ஆண்டாக சேவை செய்த கன்னியாஸ்திரி அவமதிப்பு!

புவனேஸ்வர்:
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் எனிடினா. கன்னியாஸ்திரியான இவர், மாட்ரிட்கேபிட்டல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுவிட்டு 1966-ஆம் ஆண்டு இந்தியாவின் பெர்ஹாம்பூருக்கு வந்தார். அவர் அங்கு தங்கி 5 ஆண்டுகளாக சமூக சேவைசெய்து வந்தார். பின்னர், கடந்த 1971-ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்திலுள்ள அலிகண்டா கிராமத்தில் கிளினிக்அமைத்து, அங்குள்ள மக்களுக்கு மருத்துவச் சேவையாற்றத் துவங்கினார். எனிடினாவின் சேவையைக் கருத்தில் கொண்டு இந்திய அரசும் அவருக்கான விசாவை நீட்டித்து வந்தது. 86 வயதான போதும், கடந்த 50 ஆண்டுகளாக எனிடினா தனது மருத்துவச் சேவையை நிறுத்தவில்லை.ஆனால், மத்திய பாஜகஅரசானது, எனிடினாவிற் கான விசாவை நீட்டிக்க மறுத்து விட்டதுடன், அவரை10 நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டது. இதனால் வேறுவழியின்றி எனிடினா ஆகஸ்ட் 20-ஆம் தேதிஸ்பெயின் நாட்டிற்கே சென்றுவிட்டார். எனிடினா தங்களைப் பிரிந்து சென்றதால், அலிகண்டா கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனிடினா மீண்டும் அலிகண்டா கிராமத்தில் சேவையாற்ற அனுமதிக்க வேண்டும் என்றுகோரிக்கையும் விடுத்துள்ளனர்.