புவனேஸ்வர்:
ஒடிசாவில் வெள்ளியன்று கரையைக் கடந்த ஃபானி புயலால் புரி மாவட்டத்தில் 3 பேர் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. புரி மாவட்டம் சக்திகோபால் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். நயாக்ரா மாவட்டத்தில் குடிநீர் எடுக்கச் சென்ற பெண் மீது கட்டடம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டி, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் ஃபானி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கரையைக் கடந்த ஃபானி புயல், தற்போது அதி தீவிரப் புயலாக இருந்து தீவிரப் புயலாக வலு குறைந்த நிலையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.