ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் 50 பயணிகளுடன் பெர்ஹம்பூரில் இருந்து டிக்கிரிக்கு சென்ற பேருந்து ஒன்று, கஞ்சம் மாவட்டத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்ததில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 42 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.