மதுரை, ஆக. 20- விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கப் கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் ராமசாமி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் - ராஜ மாணிக்கம் அமர்வு முன்பாக வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா கூட இந்த முறை நடைபெற வில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் விநாயகர் சிலை வைக்க ஏன் அவசரப் படு கிறீர்கள் என கேள்வியெழுப்பிய நீதிபதி கள், அரசு அனுமதி வழங்கி உள்ள ஆண்டி ற்கு 10 ஆயிரம் வருமானம் உள்ள சிறிய கோவில்களில் சென்று அங்குள்ள விநாய கரை வழிபட்டுக் கொள்ளுங்கள்”என்றனர்.
மேலும், “முன்னேறிய நாடுகள் கூட கொரோனாவை சமாளிக்கத் திணறி வருகிறது. இந்த நிலையில் இது போன்ற விழாக்களை நடத்துவது சிரமத்தை ஏற்படுத்தி விடும்” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் திருவில்லிபுத்தூரில் உள்ள இந்து மக்கள் கட்சியின் விருதுநகர் மாவட் டச் செயலாளர் ஈஸ்வரன் வீட்டில் விநாயகர் சிலைகள் உள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து ஈஸ்வரன் வீட்டிற்குச் காவல்துறை, வருவாய்துறையினர் அவரது வீட்டில் 52 விநாயகர் சிலைகள் இருப்பதை உறு திப்படுத்தினர். சிலைகளை பொதுவெளி யில் வைத்து வழிபட தடை விதிக்கப் பட்டுள்ளது. வீட்டில் வைத்து மட்டுமே வழி பாடு செய்யவேண்டுமெனக் கூறிய காவல் துறையினர் பொதுவெளியில் விநாயகர் சிலை வைத்தால் நிச்சயம் கைது செய்யப்படு வீர்கள் என எச்சரித்தனர். வீட்டிலுள்ள விநாயகர் சிலைகள் வெளியே எடுத்துச் செல்லாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.