tamilnadu

img

பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுகோள்

புதுதில்லி,மார்ச் 6- பொது இடங்களில் மக்கள் கூடு வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண் ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ள நிலை யில், கொரோனா வைரஸ் நோய் கட்டுக்குள் வரும் வரை மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும்  தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் மக்கள் பங் கேற்க நேரிடும் போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக ளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எடுக்க மாநில அரசுகள் வழிகாட்டு தல்களை வழங்கி  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.