சென்னை,ஜன. 1- ஜனவரி 5ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்” என்றார்.
கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழகம் உள்ளது. எனவே தான் தற்போது மழை பெய்கிறது. தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யும். தமிழகம், புதுவையில் வடகிழக்கு பருவ மழை ஜனவரி 5 வரை தொடரும் என குறிப்பிட்டார்.