வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை,செப்.22 வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை யொட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படு கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும். தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்க ளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணா மலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை
இந்நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடி, மின்னலு டன் கூடிய பலத்த மழை பெய்தது. அடையாறு, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், ஆழ்வார்ப்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, கோயம்பேடு உட்பட சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.