tamilnadu

img

மாநிலங்களை புறக்கணித்தது மோடி அரசு

புதிய கல்விக் கொள்கை 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிய கல்விக்கொள்கை 2019க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “நாடாளுமன்றத்தை புறக்கணித்து, மாநில அரசாங்கங்களின் கருத்துக்களையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு, கல்வித்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் வாங்கி காலில் போட்டு மிதித்துவிட்டு, நமது ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பையும் அழித்தொழிக்கக்கூடிய கல்விக் கொள்கையை தன்னிச்சையான முறையில் மோடி அரசு அறிவித்திருக்கிறது” என்று சாடினார்.  “கல்வி என்பது, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலில் இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு ஒரு கல்விக் கொள்கையை தானடித்த மூப்பாக திணிப்பது முற்றிலும் சட்டவிரோதமானது. இந்திய கல்வியை முற்றிலும் மத்திய அரசின் கைகளுக்குள் மையப்படுத்துவது, மதவெறி மயமாக்குவது மற்றும் வணிகமயமாக்குவது என்ற பாஜக அரசின் கொடிய கொள்கை கடுமையான முறையில் எதிர்க்கப்பட வேண்டும்” என்றும் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

புதுதில்லி, ஜூலை 29 - ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் துவக்கக் கல்வி, உயர்கல்வி வாய்ப்புகளை முற்றாக பறிக் கும் ஆபத்தான திட்டங்களுடன் கூடிய புதிய கல்விக் கொள்கை 2019-க்கு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் அமைச் சரவை புதனன்று ஒப்புதல் அளித்தது. அமைச்சரவை ஒப்புதல் அளித்த விப ரத்தையும் புதிய கல்விக் கொள்கை தொடர் பான அம்சங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் உயர்கல்வித்துறை செய லாளர் அமித் காரே, பள்ளிக் கல்விச் செயலா ளர் அனிதா கர்வால் ஆகியோர் பேசுகை யில், புதிய கல்விக்கொள்கை 2019, இந்திய பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை யில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவதாக இருக்கும் என்றுகுறிப்பிட்டனர்.

மோடி அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு 2019 கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொது மக்கள் மத்தியில் கருத்துக் கேட்புக் காக வெளியிடப்பட்டது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில், முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப் பட்ட குழு இந்த வரைவுக் கொள்கையை உருவாக்கியது. இதற்கு முன்பு அமைக்கப் பட்டிருந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரைகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்த வரைவுக் கொள்கையை மேற்கண்ட குழு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் அளித்தது. இதைத்தொட ர்ந்து பொது தளத்தில் வெளியிடப்பட்டு, 2019 ஜூலை 31 வரை அனைத்து தரப்பிட மிருந்தும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இந்நிலையில் 2லட்சத்திற்கும் அதிக மானோரிடமிருந்து கருத்துக்கள் கிடைக்கப் பெற்ற நிலையில் அவற்றைப் பற்றிய விளக்கங்கள் மற்றும் தெளிவுகள் எதுவும் இல்லாமல், மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது.  இது நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கல்விக்கொள்கை வரைவு 2019 வெளியிடப்பட்ட தருணம் முதல், அதில் கூறப்பட்டிருந்த பல்வேறு அம்சங்கள் தொடர்பாக நாடு முழுவதும் கடும் எதிர்ப் பலை எழுந்தது. குறிப்பாக சமஸ்கிருத த்தை மையமாகக் கொண்ட மும்மொழிக் கல்வித்திட்டம், நாடு முழுவதும் 5 மற்றும்  8ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு, பிஎட் கல்வியியல் படிப்பை  நான்காண்டு படிப்பாக மாற்றுவது, கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கு வதற்கு ஏற்ற விதத்தில் தனியாருக்கு அதிகப்படியான வாய்ப்புகளை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் இயக்கங்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங் கள் ஆவேசமிக்க போராட்டங்களை நடத் தின. புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர் பாக விரிவான மாற்றுக் கருத்துக்கள், ஆலோசனைகளை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கல்விக்கொள்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக் காமல், மாநில அரசுகளுடனும் கலந்தா லோசிக்காமல் தானடித்த மூப்பாக மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய தகவல் ஒளி பரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடே கர் ஊடகங்களுக்கு புதனன்று மாலை அறிவிப்பு வெளியிட்டார்.

இதுதொடர்பான முக்கிய அம்சங் களை வெளியிட்ட கல்வித் துறை செயலாளர் கள், 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நாடு  ஒரு புதிய கல்விக் கொள்கையை பெற்றி ருக்கிறது என்றும், 1986ல் அமலாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை இத்துடன் காலா வதியாகிறது என்றும் தெரிவித்தனர். தற்போ தைய புதிய கல்விக் கொள்கை தொடர் பாக நாடு முழுவதும் 2.5லட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களுடன் மத்திய அரசு விவாதித்துவிட்டதாக புதிய தகவல் களையும் அவர்கள் வெளியிட்டனர்.  கல்வித்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது 4 சதவீதம் அளவிற்கு நிதி ஒதுக்கப்படு கிறது எனக்குறிப்பிட்ட அவர்கள், இந்த நிதியை 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது என்றும், ஆனால் அந்த நிதியை மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டாக ஒதுக்கிட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கல்வித்துறையில் திட்டமிடுதல், கற்பித்தல், கற்றல், தேர்வு முறைகள் மற்றும் நிர்வாக முறைகள், ஒழுங் காற்று நடைமுறைகள் அனைத்திலும் புதிய தொழில்நுட்பங்கள் தீவிரமாக்கப்படும் எனத் தெரிவித்த அவர்கள், ஆன்லைன் வெளியிலான பாடங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாமல் பிராந் திய மொழிகளிலும் அளிப்பதற்கான முயற்சி களில் நாட்டில் அறிவியல் நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என கல்விக்கொள்கை யில் கூறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

5ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி அல்லது பிராந்திய மொழிக்கல்வி உறுதி செய்யப்படும் என்றும் துவக்கநிலையி லிருந்து பொதுத்தேர்வுகள் இரண்டு முறை களில் அமலாக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர்கள், 6ஆம் வகுப்பிலிருந்து தொழிற் கல்வி பாடம் அனைவருக்கும் கட்டாயமாக அளிக்கப்படும் என்றும் கூறினர். உள்ளூர் தொழில்களைப் பற்றி அறிந்துகொள்ள ஒவ்வொரு மாணவரும் பத்து நாட்கள் உள் ளூர் தொழிற்சாலையில் வேலை செய் வது கட்டாயமாக்கப்படும் என்றும் கூறினர்.  குழந்தை பராமரிப்பு தொடர்பான கல்வி ஒரு பாடமாக நினைக்கப்படும் என்றும் இதற்கான பாடத்திட்டத்தை என்சிஇஆர்டி உருவாக்கும் என்றும் தெரிவித்த அவர் கள், கல்லூரியில் நுழைவதற்கு நாடு தழு விய பொது நுழைவுத்தேர்வு நடத்தப் படும் என்றும் தெரிவித்தனர். எனினும், இந்த நுழைவுத்தேர்வு அனைவருக்கும் கட் டாயமல்ல என்றும் கூறினர். 2023ஆம் ஆண்டுக்குள் புதிய நடைமுறைக்கு ஆசிரி யர்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கல்விக்கொள்கையில் கூறப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்த னர். புதிய கல்விக்கொள்கை தொடர்பான முக்கிய அம்சங்களையும் அவர்கள் வெளியிட்டனர்.