மத்தியக்குழுவிடம் கரும்பு விவசாயிகள் புகார்
சென்னை, செப்.25- தமிழகத்தில் சர்க்கரை துறை சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து விவாதிப்பதற்காக சர்க்கரை துறையின் மத்திய அரசு அதிகாரி கள் குழு தமிழகத்திற்கு வருகை தந்தது. செப்.24அன்று சென்னை யில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் பங்கேற்று மத்திய சர்க்கரை துறை இணைச் செய லாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கரும்பு உற்பத்தி செலவு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலை யில் கரும்புக்கான மத்திய அரசின் விலை, 2019-20க்கு 10 சதம், ரெக்க வரிக்கு ரூ.2750 என மத்திய அரசு கடந்த ஆண்டு விலையையே அறிவித்திருப்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து ஒரு டன் கரும்புக்கு 9.5 சதம் ரெக்க வரிக்கு ரூ.4000 விலையை அறி விக்க வேண்டும். தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள் 2018-19ல் எப்ஆர்பி கரும்பு பண பாக்கி ரூ.400 கோடிக்கு மேல் உள்ளதை வட்டியுடன் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2013-14 ஆம் ஆண்டு முதல் 2016-17 வரை தமிழ்நாடு அரசு அறி வித்த கரும்புக்கான பரிந்துரை விலையில் (எஸ்ஏபி) தனியார் ஆலைகள் ரூ.1200 கோடியும், கூட்டுறவு ஆலைகள் ரூ.200 கோடி யும் பாக்கி வைத்துள்ளன. நிலு வையிலுள்ள அந்த பாக்கியை விவசாயிகளுக்கு பெற்றுத்தர மாநில அரசுக்கு உதவிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டு றவு சர்க்கரை ஆலைகள் மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலை கள் உள்ளதை நவீனப்படுத்தவும், இணை மின் திட்டப் பணிகளை செயல்படுத்தவும், கடன் சுமை யில் இருந்து கூட்டுறவு ஆலை களை மீட்டு கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலை களை பாதுகாத்து மேம்படுத்த வும் மத்திய அரசு நிதி உதவி செய்ய ஆவண செய்ய வேண்டும்.
2004-05 முதல் 2008-09 வரையி லான காலத்திற்கு கரும்பு கட்டுப் பாடு சட்டப்படி 5ஏ லாப பங்குத் தொகை பாக்கியை தனியார் சர்க் கரை ஆலைகள் விவசாயி களுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது. உத்தரவுப்படி 5ஏ லாப பங்குத் தொகை பாக்கியை விவ சாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டு கிறோம். சர்க்கரை ஆலைகள் சர்க்கரை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலை கள் உற்பத்தி செய்த சர்க்கரையை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கரும்பு பணத்தை உரிய காலத்தில் தர முடியவில்லை என்று ஆலைகள் கூறுகின்றன. சர்க்கரை விற்ப னைக்கு உள்ள கட்டுப்பாடுகளி லிருந்து தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அம்பிகா, ஆரூ ரான் சர்க்கரை ஆலைகள் விவ சாயிகள் பெயரில் ரூ.400 கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். இதனால் விவ சாயிகள் சிரமத்தில் உள்ளனர். வங்கிகள் சர்க்கரை ஆலை பெற்ற கடனுக்கு விவசாயி களுக்கு நோட்டீஸ் அனுப்பு கின்றனர். விவசாயிகள் பெயரில் அம்பிகா, ஆரூரான் ஆலைகள் வாங்கியுள்ள கடனை சர்க்கரை ஆலைகள் பெயரில் மாற்றி விவ சாயிகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன் கோரிக்கை மனு கொடுத்தார். மாநில வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங்பேடி, சர்க்கரை துறை ஆணை யர் மற்றும் அதிகாரிகள், சர்க்கரை ஆலை முதலாளிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.