tamilnadu

img

ரூ. 250 கோடி பாக்கியை வட்டியுடன் பெற்றுத் தர வேண்டும்

வேளாண்மைத்துறை முதன்மை இயக்குநருக்கு கோரிக்கை

சென்னை,டிச.19- தனியார் ஆலைகளில் கரும்பு விவ சாயிகளுக்கு தர வேண்டிய 2018-19 ஆம் ஆண்டு கரும்பு நிலுவை தொகை  ரூ. 250 கோடியை வட்டியுடன் பெற்றுத்தர வேண்டும் என்று வேளாண்மைத்துறை முதன்மை இயக்குநரை தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செய லாளர் டி.ரவீந்திரன் மனு அளித்துள் ளார். அதன் விவரம் வருமாறு:- ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை ரூ. 60 கோடி,  தரணி சர்க்கரை ஆலை ரூ.75 கோடி, சக்தி சர்க்கரை ஆலை ரூ. 42 கோடி என கடந்த ஆண்டு (2018-19) கொள் முதல் செய்த கரும்புக்கு ரூ.177 கோடி எப்ஆர்பி பாக்கி வைத்துள்ளன. சட்டப்படியும், ஆலையுடன் போட்ட ஒப்பந்தப் படியும் 14 நாட்களில் தர வேண்டிய கரும்பு பணத்தை ஓராண்டாகியும் விவசாயிகளுக்கு தராததால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். 

விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனை

குறிப்பாக கூட்டுறவு வங்கிகளில் 15 மாதங்கள் வரை வட்டியில்லாமல்  விவசாயிகள் பெற்ற கரும்பு பயிர்க்  கடனை 15 மாதங்களுக்குள் திரும்ப  செலுத்தாததால் தற்போது அந்த 15 மாதங்களுக்கும் சேர்த்து வட்டி  செலுத்த வேண்டியநிலை ஏற்பட்டுள் ளது. இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் விவசாயிகள் அடகு வைத்த  நகைக்கு பணம் கட்டினால் அதை கரும்பு கடனில் வரவு வைக்கின்றனர். விவசாயிகள் கடலை, நெல், இதர  தானியங்களை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விற்கிறார்கள். ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் விவ சாயிக்கும் வங்கிக்கும் அனுப்பும் பணத்தை கரும்பு கடனில் வரவு வைக்கின்றனர். 2019 - 20 ஆம் ஆண்டுக்கு  புதிய கரும்பு பயிர் கடன் விவசாயிகள் பெற இயலவில்லை.

கிராமங்களில் கரும்பு பணத்தை எதிர்பார்த்து குடும்ப தேவைகளுக்கு தனியாரிடம் வாங்கிய வட்டிக்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப் படுகின்றனர். இத்தகைய சிரமங்களை கரும்பு விவசாயிகள் சந்திக்கும் சூழ லில் கடந்த ஆண்டு கரும்பு பணத்தை  தராமலேயே 2019-20 ஆம் ஆண்டு  அர வையை தொடங்கவும், ஆலைகள் தயாராகி வருகின்றன. இது சட்டவிரோத மானது. எனவே, தமிழக அரசும், சர்க்கரை துறை ஆணையமும் உடனடி யாக தலையிட்டு மேற்கண்ட ஆலைகள்  தர வேண்டிய எப்ஆர்பி பாக்கியை 15 சதவீதம் வட்டியுடன் விவசாயிகளுக்கு பெற்றுத் தர வேண்டும். 

கழிவு என்கிற பெயரில் கொள்ளை

ஒரு டன் கரும்புக்கு ஒரு சதம் எடை யில் கழிவு செய்து கொள்ள கரும்பு கட்டுப்பாடு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இயந்திரத்தின் மூலம் கரும்பு  வெட்டும் சர்க்கரை ஆலைகள் 19.32  சதம் வரை எடையில் கழிவு செய்கின்ற னர். ஒரு டன் கரும்புக்கு 200 கிலோ  வரை எடை கழிவு என்கிற பெயரில்  சர்க்கரை ஆலைகள் கொள்ளை யடிக்கின்றனர். நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை 1. ஜெகதீசன் -  பாக்கம் கிராமம், சொரனாவூர் கோட்டம்  இவர் அனுப்பிய கரும்பு ஒரு டன்னுக்கு 19.32 சதவீதமும்,  ஆசை தம்பி -  விசூல் கிராமம், பண்ருட்டி கோட்டம் இவர் அனுப்பிய கரும்புக்கு டன்னுக்கு  18 சதவீதமும் எடையில் கழிவு செய்துள்ளனர். 

மாநில அரசு மற்றும் சர்க்கரைத் துறை ஆணையத்தின் உத்தரவின்றி தன்னிச்சையாக சர்க்கரை ஆலைகள் அவர்கள் விருப்பத்திற்கு கரும்பு கழிவு  என்கிற பெயரில் எடை குறைப்பதை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்  வன்மையாகக் கண்டிக்கிறது. பாடு பட்டு விவசாயிகள் கொடுக்கிற கரும்பை  சர்க்கரை ஆலைகள் கொள்ளை யடிப்பது தடுக்கப்பட வேண்டும்.  சர்க்கரைத் துறை ஆணையம் இயந்திரத்தின் மூலம் கரும்பை வெட்டினால் எவ்வளவு கழிவு செய்ய  வேண்டுமென்பது குறித்து விஞ் ஞானப்பூர்வமாக ஆய்வு செய்து உட னடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.  உத்தரவுக்கு அதிகமாக கடந்த பல ஆண்டுகளில் விவசாயிகளிடம் பிடித்தம் செய்த கரும்பிற்கான பணத்தை விவசாயிகளுக்கு தர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி வித்திருக்கிறார்.