ராமநாதபுரம்
தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படும் ராமேசுவரம் பகுதி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. இங்கு உள்ள சிவன் கோவிலில் மக்கள் தங்களின் மூதோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அருகில் உள்ள கடலில் குளித்துவிட்டுச் செல்வார்கள். கடலும், கோவிலும் அருகருகே இருப்பதாலும், தனுஷ்கோடி போன்ற சுற்றுலா பகுதியும் உள்ளதாலும் தென்னிந்தியாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பக்தர்கள் ராமேசுவரத்திற்கு படையெடுப்பார்கள்.
இதனால் ராமேசுவரம் பகுதி, பாம்பன் பாலம், தனுஸ்கோடி, தங்கக்சி மடம் போன்ற பகுதிகளில் ஆண்டுமுழுவதும் திருவிழா போல் காட்சி அளிக்கும். தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் அந்த பகுதிகள் வெறிசோடி காணப்படுகிறது.
இந்நிலையில் வரும் 20-ஆம் தேதி ராமநாதபுர மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரணம் அன்றைய தினம் ஆடி அமாவாசை. ஆண்டின் மற்ற அமாவாசை நாட்களை விட ஆடி அமாவாசை தினத்தில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் அம்மாவட்ட எஸ்பி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.