tamilnadu

img

ரயில் படிக்கட்டில் பயணித்தால் கடும் நடவடிக்கை

சென்னை,ஜூலை 3- ரயில் படிக்கட்டில் பயணம் செய்ப வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.  தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்களில் பயணம் செய்ய குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும் சிலர் அந்த டிக்கெட்டை கூட எடுக்கா மல் ஓசியில் பயணம் செய்கின்றனர். இதுபோன்று டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களை டிக்கெட் பரிசோ தகர்கள் அவ்வப்போது சோதனை செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.  ரயில்களில் படிக்கட்டில் நின்று ஆபத்தை உணராமல் சிலர் ‘சாகச பயணம்’ மேற்கொள்கின்றனர். இவ் வாறு பயணிப்பவர்கள் மீது ரயில்வே சட்டம் ‘156’ பிரிவின் கீழ் அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்கப்படுகிறது. பரங்கிமலை அருகே கோர விபத்து ஏற்பட்ட போதிலும் அதன் ஆபத்தை  உணராமல் ரயில் படிக்கட்டு பயணம் தினமும் தொடர்கிறது. இந்நிலையில்  ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.