tamilnadu

img

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.50க்கு தயாரிக்க முடியும்: மத்திய அமைச்சர்

வேலூர், செப்.29- விஐடியின் 34 வது பட்ட மளிப்பு விழாவில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு 7022 மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இந்த விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,“மத்திய அரசு தூத்துக்குடி , காண்ட்லா மற்றும் பாரதீப் துறைமுகங்களிலிருந்து குறைந்த விலையில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்றை பரிசீலித்து வரு கிறது. இந்த திட்டம் நிறை வேறினால் 1 யூனிட் மின்சாரம் ரூ. 2.50 க்கு தயாரிக்க முடியும் மற்றும் கடல் நீரை குடிநீராக  மாற்றும் திட்டமும் இத்துடன் இணைந்து மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும்”என்றார். இளம் பட்டதாரிகள் நவீன அணுகுமுறைகளை கையாள வேண்டும், இது அவர்களை  தொழில் முனைவர்களாக மாற்றும். இளம் பொறியா ளர்கள் வேலைகளை தேடுவதை விட்டுவிட்டு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

விப்ரோ நிறுவனத்தின் சர்வதேச திறன் மேம்பாட்டுத் தலைவர்,  விஸ்வாஸ் தீப் பேசுகையில்,“ தனது நிறுவன மும் விஐடி-யும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள தாகவும், இதற்கு காரணம் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து நிறைய மாணவர்களை விஐடியி லிருந்து வேலை வாய்ப்பு வழங்கி யதே என்றும்.  இந்த ஆண்டு மட்டும் 278 மாணவர்களுக்கு தனது நிறுவனத்தால் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார். விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் தனது தலைமை உரையில்,“ மத்திய அரசு விஐடியை   சீர்மிகு நிறுவனம் என அங்கீகரித்து அறிவித்துள்ளது. தனது கனவு, விஐடியை சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இணையாக உயர்த்த வேண்டும்” என்றார்.  முன்னதாக விஐடி வளா கத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 9 லட்சம் சதுரடியில் ரூ. 300 கோடி மதிப்பிலான பேர்ல் ஆராய்ச்சி பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார். பட்டமளிப்பு விழாவில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர். சேகர் விசுவநாதன், ஜி. வி. செல்வம், செயல் இயக்குநர் டாக்டர். சந்தியா பெண்ட்ட ரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி ச. விசுவநாதன்,  துணை வேந்தர் டாக்டர் ஆனந்த் ஆ. சாமுவேல்,  இணை துணைவேந்தர் டாக்டர். எஸ். நாராயணன், பதிவாளர் டாக்டர் கே. சத்தியநாராயணன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.