திங்களன்று வடலூரில் துவங்கிய ஜனநாயக மாதர் சங்கத்தின் பாலின வன்முறைகளுக்கு எதிரான நடை பயணத்தில் 100 க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் மகளிரும் இணைந்தனர். இதற்கான வேண்டுகோளை தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு விடுத்திருந்தது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இன்சூரன்ஸ் மகளிர், சங்கத்தின் தலைவர்கள் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்று நடைபயணத்திலும் சங்க கொடிகள், சிவப்பு நிற தொப்பிகளோடு கலந்து கொண்டனர்.துவக்க நிகழ்ச்சியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எம். கிரிஜா வாழ்த்துரை வழங்கினார். நடைபயணத்தில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் தலைவர்கள் கே.சுவாமிநாதன், ஆர்.சர்வமங்களா, ஆர்.கே. கோபிநாத், தென் மண்டல மகளிர் துணைக் குழு அமைப்பாளர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நடைபயணத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஆயுள் மற்றும் பொது இன்சூரன்ஸ் அமைப்புகள் மற்றும் அவர்களின் தொடர்புகள் வாயிலாக நடைபயணத்திற்கு ரூ 50000 நன்கொடையும் வழங்கப்பட்டுள்ளது.