சென்னை, ஜூலை 25 தமிழகம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உருக்கு உற்பத்தி மற்றும் விற்பனை யில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் உரிமை யாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சுமார் 130 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமான வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை யடுத்து இந்நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இந்நிறுவனங்கள் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.