tamilnadu

img

உற்சாகம், நம்பிக்கை அளிக்கும் அனுபவத்துடன் முன்னேறுகிறது தீக்கதிர்

திருப்பூர் மாவட்டத்தில் 718 தீக்கதிர் சந்தா தொகை ஒப்படைப்பு

திருப்பூர், செப். 30 - திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், க.கனக ராஜ் ஆகியோர் தீக்கதிர் சந்தா பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சந்தா  தொகையைப் பெற்றுக் கொண்டனர்.  திருப்பூர் வடக்கு மாநகரப் பகுதியில் 253, வடக்கு ஒன்றியத்தில் 197, அவிநாசி யில் 138, ஊத்துக்குளியில் 130 என  ஒரே நாளில் மொத்தம் 718 சந்தாவுக் கான தொகை அவர்களிடம் வழங்கப் பட்டது. திருப்பூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் பலதரப்பட்ட வாசகர்களின் அன்பான ஒத்துழைப்புடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் சந்தா சேர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் மக்களைச் சந்தித்து வருகின்றனர். செல்லும் பகுதிகளில், “தீக்கதிர் சந்தா சேர்ப்புக்காக வந்திருக்கிறோம்” எனச் சொன்னால், மிகப்பெரும்பாலான வாசகர்கள் உடனடியாக சம்மதம் தெரி விக்கின்றனர். குறிப்பாக தொழில், விவ சாயம் நெருக்கடி நிலையில் இருக்கிறது.  எனவே பொருளாதாரம் பாதிக்கப் பட்டிருப்பதால் சந்தா சேர்ப்பது சிரமமாக இருக்கும் என்ற கணிப்புடன் ஒவ்வொரு வரையும் அணுகினால், அவர்கள் சிரமத்தையும் கடந்து தீக்கதிருக்கான சந்தா தொகையை கொடுப்பதாக இந்த இயக்கத்தில் பங்கேற்ற தோழர்கள் கூறினர். இது போன்ற அனுபவம் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கிறது என, புதிய பகுதிகளில் இதுவரை தீக்கதிர் வாங்காதவர்களை யும் சந்தித்து சந்தா சேர்க்கும் முயற்சி யில் இறங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் பல பகுதிகளில் தீக்கதிர் சந்தா சேர்ப்புக்குப் போனபோது கிடைத்த அனுபவம் குறித்து பல தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.

திருப்பூர் தொழில் துறை சார்ந்த பல விசயங்களையும் தீக்கதிர் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது என்று  தொழில் முனைவோர் தெரிவித்துள்ள னர். ஆக சாமானியர்கள், பெண்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்கள், தொழில் முனைவோர் என பல தரப்பினரின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பெற்றதாக தீக்கதிர்  இருப்பதை சந்தா சேர்ப்பு அனுபவத்தில் அறிய முடிகிறது. பல அரசியல் கட்சிகள் பத்திரிகை களை நடத்துவதற்குச் சிரமப்படும் நிலை யில், தீக்கதிர் கம்பீரமாக தனது பய ணத்தை தொடர்ந்து வருகிறது. எண்ண ற்ற தோழர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புத்தான் இந்த வெற்றிகரமான பயணத்தை சாத்தியமாக்கி இருக்கிறது. புதிய பகுதிகளுக்குச் செல்லும்போது எதிர்பார்த்ததைவிட பல மடங்கு சந்தா எண்ணிக்கை அதிகரிப்பதையும் பார்க்க முடிகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்கள், சந்தா தொகையைப் பெற்றபோது கூறினர்.

ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் திருப்பூர் வடக்கு மாநகரப் பகுதியில் ஆறு மையங்களிலும், தீக்கதிர் முதன்மை பொது மேலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ் ஆகியோர் அவிநாசி, திருப்பூர் வடக்கு ஒன்றியம், ஊத்துக்குளி ஆகிய மையங்களிலும் நேரடியாக கிளை களுக்குச் சென்று இதுவரை சேர்க்கப் பட்ட தீக்கதிர் சந்தா தொகைகளைப் பெற்றுக் கொண்டனர். இவர்களுடன் அந்தந்த பகுதிகளின் இடைக்குழுச் செய லாளர்கள், மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மக்கள் கொடுக்கும் ஆதரவின் உற்சாகத்துடன், கிளைத் தோழர்களின் சுறுசுறுப்பான செயல்பாட்டுடன் திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் சந்தா சேர்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அக்டோபர் 10ஆம் தேதி திருப்பூரில், ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பங்கேற் கிறார். இந்த நிகழ்வை வெகு சிறப்பாக நடத்துவதற்கு கட்சியின் மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தீக்கதிர் சந்தா சேர்ப்பு இலக்கை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து, மொத்த சந்தா தொகையை ஒப்படைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெண் தொழிலதிபர் ஒருவர் கூறுகையில், பல நாளிதழ்களை யும் படிக்கிறேன், இருந்தாலும் தீக்கதிர் படிக்கும் போது தான் சரியான கோணத்தில், உண்மையான செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்று கூறினார்.

அதிமுக பிரமுகர் ஒருவர் கூறும்போது, இன்றைக்கு அரசியலில் மக்கள் சேவை, மனித நேயம் என்பது போய்விட்டது, வியாபார அரசியல்தான் உள்ளது. இந்த சூழ்நிலையில் மனிதநேய, மக்கள் அரசியலைத் தெரிந்து கொள்ள உங்கள் கட்சி பத்திரிகைக்கு சந்தா சேருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

திமுகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறும்போது, நேர்மையான அரசி யலைச் சொல்லும் நாளிதழாக தீக்கதிர் இருக்கிறது. பல கட்சிகள் சுயநல அரசியலை மேற்கொண்டிருக்கும் நிலையில் தீக்கதிர் மக்கள் அரசியலைப் பற்றி தெளிவாக எடுத்துச்  சொல்கிறது. உண்மை செய்தியைத் தருவதாகச் சொல்லும் பிற நாளிதழ்கள், ஆட்சியாளர்கள் பற்றிய பல விசயங்களை மறைத்துவிடுகின்றன;  தீக்கதிரைப் படித்துத்தான் இந்த அரசியலைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்றார்.
 

மற்றொரு சுவை யான நிகழ்வும் நடைபெற்றது. திருப் பூரில் உள்ள பிரபல உண வகம் ஒன்றின் உரிமையாள ரிடம் சந்தா புதுப்பிப் பதற்காக சென்றபோது, கடந்த ஆண்டு சந்தா கொடுத்து, ஆறு மாதம் பேப்பர் வரவில்லையே என்று கேட்டிருக்கிறார்.  இதைக் கேட்டு சங்கடமான நிலையில், உடனடியாக அந்த சந்தா நாளிதழ் பற்றி தீக்கதிர் நிர்வாகத்தின் மூலம் சரி பார்க்கப்பட்டது. அதில், தொடர்ந்து நாளிதழ் போய்க் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  அவர்கள் வரவில்லை என்கிறார்களே, அப்படி யானால் அந்த நாளிதழ் எங்கே என்ற கேள்வியுடன் விசாரித்தனர். அப்போது தான் உண்மை தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட உணவகத்தின் காவலாளி யாக வேலை செய்பவர் தீக்கதிரை வாசிக்கத் தொடங்கி, அது மிகவும் பிடித்துப் போகவே, காலை வந்தவுடன் தீக்கதிரை எடுத்துச் சென்று ஒவ்வொரு நாள் செய்தியையும் முழுமையாகப் படித்து விடுவாராம்! இது தெரிந்த வுடன் உணவக உரிமை யாளர், பரவாயில்லை, இனிமேல் இங்கேயே நாளிதழ் இருக்க வேண்டும் என சொல்லிவிட்டு, இந்த ஆண்டு சந்தாவை புதுப்பித்துக் கொண்டார்.