tamilnadu

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவுச் சுடர்

காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 19 அன்று துவங்கும் சிஐடியு மாநில மாநாட்டை நோக்கி வடசென்னை ஓட்டேரியில் உள்ள தோழர் வி.பி.சிந்தன் நினைவிடத்திலிருந்து தியாகிகள் நினைவுச்சுடர் செவ்வாயன்று புறப்பட்டது. சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் க.திருச்செல்வன் எடுத்துக் கொடுக்க, வி.பி.சி. நினைவுச் சுடரை வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை பெற்றுக் கொண்டார்.  அவர் உட்பட எஸ்.கே.மகேந்திரன், வி.குப்புசாமி(வடசென்னை), கே.விஜயன், ராஜேந்திரன், நித்யானந்தம்(திருவள்ளூர்), பொன்முடி, பாலகிருஷ்ணன் (தென்சென்னை) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றர்.