ராணிப்பேட்டை:
தீக்கதிர் நாளிதழின் வேலூர் மாவட்ட நிருபரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராணிப்பேட்டை கிளைத் தோழருமான தோழர் கே.ஹென்றி லாசரஸ் உடல் ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரில் கடந்த புதன்கிழமை மாரடைப்பால் காலமானஅவரது உடல் ராணிப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கபட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தீக்கதிர் நிர்வாகிகள் ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், உறவினர்கள் பல்வேறு அரசியல் கட்சியினர் உள்படபலர் அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, தீக்கதிர் சென்னைப் பதிப்பின் பொது மேலாளர் சி.கல்யாண சுந்தரம், தலைமை செய்தியாளர் ஸ்ரீராமுலு, அச்சுப்பிரிவு மேலாளர் இளங்கோ, நூர்தீன், விளம்பரபிரிவு நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சந்தீப், தமிழ்நாடு யூனியன்ஆப் ஜர்னலிஸ்ட் தலைவர்புருஷோத்தமன், பொதுச்செயலாளர் போளூர் சுரேஷ், சிபிஎம்மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என். காசிநாதன், ஏ.நாராயணன், செ.ஏகலைவன், சிஐடியுமாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், மாதர் சங்க மாநிலச்செயலாளர் எஸ்டி.சங்கரி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கோவலன், விவசாயிகள் சங்கமாவட்டச் செயலாளர் ப.சக்திவேல், விதொச மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சி.சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் வி.குபேந்திரன், எல்ஐசி முகவர் சங்ககோட்டச் செயலாளர் தா.வெங்கடேசன், வங்கி ஊழியர் சங்கத்தின்முன்னாள் மாநில செயலாளர் பெபி சிவராமன், தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர் சங்க மாநில பொதுச்செயலாளர் நெமிலி தாமோதரன் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
வேலூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் எம்.துரைசாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக், முன்னாள் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உதயகுமார், டியூஜெ மாநில அமைப்புச் செயலாளர் பி.ஆர்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் இளஞ்செழியன்,மாவட்டத் தலைவர் இந்திரகுமார், மாவட்ட நிர்வாகிகள் வி.சி.ரகு, வாலாஜா புருஷோத்தமன், திருப்பத்தூர் கே.ஜி.சரவணன், தூர்தர்ஷன் செய்தியாளர் மோகன், வேந்தர் டிவி சசிகுமார்,நியூஸ் 7 ஜான், பாலிமர் மார்டின்,நியூஸ்ஜே சரத், வெளிச்சம் டிவி தீனா உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நவல்பூர் சிஎஸ்ஐகல்லறைத் தோட்டத்தில் தோழர் ஹென்றி லாசரஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.முன்னதாக சிபிஎம் மாவட்டக் குழு உறுப்னர் எல்சி.மணி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.