tamilnadu

img

காங்.எம்.பி, எச். வசந்தகுமார் உடல் இன்று சொந்த ஊரில் நல்லடக்கம்

சென்னை:
மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு வந்த அவருக்கு நிமோயா காய்ச்சல் ஏற்பட்டதால் மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால்  செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை (ஆக.28) மாலை 6.56 மணிக்கு வசந்தகுமார் உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

அஞ்சலி
சனிக்கிழமை காலை  மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட வசந்தகுமார் உடல் தி.நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அங்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வசந்த் அன்ட் கோ நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து வசந்தகுமாரின் உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பியதால், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக வைக்கப்பட இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.சிறிது நேரம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கிற்கு வெளியே காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முகுஸ் வாஸ்னிக் உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து எச்.வசந்தகுமார் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. அனைவரும் அஞ்சலி செலுத்த பிறகு நண்பகலுக்குள் உடல் 
அடக்கம் செய்யப்படுகிறது.

மறைந்த எம்பி வசந்த குமாருக்கு கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதால் அவரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது.2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்எஸ்.பி.சூர்யகுமாரை தோற்கடித்து முதன் முறையாகசட்டமன்ற உறுப்பினரானார். 2019 தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வசந்தகுமார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை தோற்கடித்து மக்களவைக்கு சென்றார்.சென்னை 600028, நாடோடிகள் மற்றும் கனிமொழி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மறைந்த வசந்தகுமாருக்கு 2 மகன்களும், ஓரு மகளும் உள்ளனர்.