சிஐடியு அகில இந்திய மாநாடு நிறைவு
சென்னை, ஜன. 27 - இந்தியத் தொழிலாளர்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்தியத் தொழிற்சங்க மைய மான சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு சென்னையில் திங்க ளன்று (ஜன.27) உழைக்கும் வர்க்க த்தின் மாபெரும் பேரணி, பொதுக் கூட்டத்துடன் நிறைவடைந்தது. கடந்த 23ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாட்டில் பொதுச் செய லாளர் தபன்சென் தாக்கல் செய்த அறிக்கை மீது நாடு முழுவதி லும் இருந்து வந்திருந்த 2ஆயிரத் திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் விவா தித்தனர். விவாதத்திற்கு பதில் அளித்து மாநாட்டின் நிறைவு நாளில் தபன்சென் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து தொழி லாளர் சட்டத்தை நெறிப்படுத்துதல், மாற்றுக்கொள்கைக்கான போராட் டம், வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு திறனுக்கான மாற்றம், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போரா ட்டம் ஆகிய 4 ஆணையங்களின் குழுவிவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை தொகுத்து அந்தக் குழுவின் தலைவர்கள் பேசினர். இதனைத் தொடர்ந்து நிர்வாகி களும், பொதுக்குழு உறுப்பினர் களும், செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர் வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சிஐடியு தலைவர் கே. ஹேமலதா உரையாற்றி மாநாட்டை நிறைவு செய்துவைத்தார். இதன் பின்னர் மாநாட்டை சிறப்பாக நடத்த உழைத்த தொண்டர்கள், அறிமுகப்படுத்தப் பட்டு பாராட்டப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் நன்றி கூறினார்.
உழைக்கும் வர்க்கத்தின் பேரணி
மாநாட்டின் நிறைவை குறிக்கும் வகையில் சைதாப்பேட்டை மெட்ரோ ரயில்நிலையம் அருகி லிருந்து மாபெரும் பேரணி புறப்பட் டது. அண்ணாசாலை வழியாக எம். சிங்காரவேலர் திடலை (நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம்) வந்த டைந்தது. பேரணியில் தமிழகம் முழுவதி லும் இருந்து ஏராளமான பெண் களும், ஆண்களும் கலந்துகொண்ட னர். பேரணி சென்ற பாதையில் சகோ தர சங்க அமைப்புகள் சார்பில் வாழ்த்து தெரிவித்து முழக்கமிட்ட னர்.
பொதுக்கூட்டம்
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிஐடியு தலைவர் கே.ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன்சென், துணைத்தலைவர்கள் ஏ.கே.பத்ம நாபன், இளமரம் கரீம் எம்.பி., கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன், மீன்வளத் துறை அமைச்சர் மெர்சி குட்டி யம்மா, தேசியசெயலாளர் ஸ்வதேஷ் தேவ்ராய், துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு, தேசிய செயலாளர் ஏ.ஆர்.சிந்து ஆகியோர் உரையாற்றினர். மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் நன்றி கூறினார்.