மேட்டூர்,ஜூலை 26- மேட்டூர் அணைக்கு வெள்ளியன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 7 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரைவிட, அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. வியாழனன்று 41.15 அடியாக இருந்த நீர் மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 42.15 அடியாக அதிகரித்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்தால் ல் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும். நீர் மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.