tamilnadu

img

5 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை, அக். 22 - மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு முயற்சியை கண்டித்து ஏஐபிஇஏ  பிஇஎப்ஐ (பொ) ஆகிய சங்கங்களின் அறை கூவலுக்கிணங்க நாடு முழுவதும் செவ்வா யன்று (அக்.22)   ஒரு நாள் வேலை நிறுத்தம்  வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுத்துறை வங்கிகளை இணைத்து தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. இதன் காரணமாக நலிந்த பிரிவினருக்கான வங்கிச் சேவையும், கடன் சேவையும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

ஆயிரக்கணக்கான வங்கிக் கிளைகள் மூடப்படுகின்றன. இன்ற ளவிலேயே 40 சதவீதமான கிராமப்புற மக்களுக்கு வங்கி கடன் உள்ளிட்ட  சேவைகள் கிட்டாத சூழ்நிலையில், பொதுத்துறை வங்கி கள் இணைப்பு முயற்சி என்பது மேலும் அதனை அரிதாக்கும். குறைந்தபட்ச இருப்பு இன்மை, ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு, வங்கிக் கிளை களில் பணம் கட்டுவதற்கு என்று ஏதாவது ஒரு காரணத்தை வைத்து பொதுமக்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அபராத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரெபோ ரேட்டுடன் வங்கிகளின் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் இணைக்கப்படுவதால் கடந்த சில ஆண்டுகளாக வட்டி விகிதம் அதலபாதா ளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது வங்கிகளில் பணம் சேமித்து வைத்திருக் கும் சாமானிய மற்றும் நடுத்தர மக்களை குறிப்பாக மூத்த குடிமக்களை கடுமையாக பாதிக்கிறது. மற்றொருபுறம் பெரு நிறு வனங்களின் வராக் கடனாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவற்றை கண்டித்து, மத்திய அரசின் மக்கள் விரோத வங்கிக் கொள்கையை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் செவ்வாயன்று (அக்.22)  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் 40 ஆயி ரம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நாடு முழுவதிலும் அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் சக்தி மிக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  தமிழகத்தில் சென்னை,  மதுரை, கோவை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்களில் ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் பங்கேற்ற பெருந்திரளான ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.