tamilnadu

பந்தலூரில் மகளிர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

உதகை, மார்ச் 7- பந்தலூர் அருகே உப்பட்டி மகளிர் தையல் பயிற்சி மையத்தில் மகளிர்களுக்கு  சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஷாலோம்  நிறு வன இயக்குனர் விஜயன் சாமுவேல் தலைமை வகித் தார். இதில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து  கலந்து கொண்டு பேசுகையில், பெண்களின் வாழ்வு நிலை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.   மகளிர்கள் நலன்கருதி பல் வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும் மக ளிர்களுக்கு சலுகை எனக்கூறி அதிகம் ஏமாற்று கின்றனர் என்றார்.   மேலும், பந்தலூர் சித்தா மருத்துவர் புவனேஸ்வரி கூறியதாவது, பெண்களின் சுகாதாரம் மேம்பட சரி யான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.  துணி கள் சரியான முறையில் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.  சமையலில் ஊட்டசத்துகளை கவனத் தில் கொண்டு காய்கறிகள், உணவுகளை தேர்வு செய்ய வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல் சமது ஆகியோரும் பேசினர். இந்நிகழ்ச்சியில் தையல் பயிற்சி மைய மாணவிகள், பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.