உதகை, ஆக 31 - குன்னூர் அருகே ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து காட்டுமாடு உயிரி ழந்தது. நீலகிரி மாவட்டம் குன் னூர் வெலிங்டன் பகுதியில் சுமார் 10 வயது மதிக்கதக்க காட்டுமாடு பாறையில் இருந்து தவறி ரயில் தண்ட வாளத்தில் விழுந்து உயி ரிழந்து கிடந்த்து.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கால்நடை மருத்துவ குழு வினர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய் யப்பட்டது.அதன்பிறகு வன ஊழியர்கள் காட்டு மாட்டை புதைத்தனர்.