உதகை,மார்ச் 9- நீலகிரியில் தனியார் நிறுவனங்களின் கால்டாக்சிகளை இயக்கிட தடைவிதிக்ககோரி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சமவெளி பகுதிகளில் இருந்து வரும் ரெட் டாக்சி, ஓலா டாக்சி போன்ற தனி யார் நிறுவனங்களின் கால்டாக்சிகளை மாவட்டத்தில் இயக்கிட தடைவிதிக்க வேண்டும், சொந்த பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட இருசக்கர மற்றும் நான்குசக்கர வாக னங்களை வாடகைக்கு இயக்கும் நபர்கள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலி யுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது உதகை ஏடிசி சுதந்திர திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.