tamilnadu

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி நூதன போராட்டம்

உதகை,ஜூன் 30- தொடர்ந்து உயர்ந்து வரும் பெட் ரோல், டீசல் விலை உயர்வைக் கண் டித்து உதகையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத் தில் ஈடுபட்டனர். மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் பெட்ரோல், டீசல் விலையை திரும்பப் பெறவேண் டும். கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் முடி வினை கைவிட வேண்டும். தமிழக அரசு கூடுதலாக மின்கட்டணம் வசூ லிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் உதகையில் ஆட்டோ   ஒன்றை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா செயலாளர் எல்.சங்கரலிங்கம் தலைமை வகித்தார். இதில், மாவட் டக்குழு உறுப்பினர் வி.வி.கிரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவவட்டச் செயலாளர் டி.அடையாள குட்டன், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் சங் கத்தின் ராமன் மற்றும் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.