tamilnadu

img

வெங்காய விலை மீண்டும் உயர்வு

சென்னை,நவ.3 சமீபத்தில் உள்நாட்டுச் சந்தையில் வெங்காய விலை திடீரென உயர்ந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்கப்பட்டதை யடுத்து வங்கதேசம், இலங்கை நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து வெங்காய விலை சற்று குறைந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து ள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில், கடந்த வாரம் ரூ.25-க்கு விற்பனை செய்ய ப்பட்ட வெங்காயத்தின் விலை தற்போது ரூ.80 ஆக ஞாயிற்றுக்கிழமை உயர்ந்து ள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.90க்கு விற்பனையாகிறது. 

மழை காரணமாக மத்திய பிரதேசத்தில் இருந்து வரும் வெங்காயம் பெரு மளவில் அழுகியதால் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படு கிறது.  அரசே வெங்காயத்தை கொள்முதல் செய்து கூட்டுறவு நியாயவிலை க்கடைகள் மற்றும் சிறப்பங்காடிகள் மூலமாக மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால் விலை குறைய வாய்ப்புண்டு.