நீலகிரி, ஜூன் 6- நீலகிரி மாவட்டத்திலுள்ள 8 முதி யோர் காப்பகங்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சி யர் அலுவலகத்தில் உதகை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில், மாவட்டத்தி லுள்ள 8 முதியோர் காப்பகங்களுக்கு தேவையான காய்கறிகளை வழங்கப் பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்ததாவது, நீலகிரி மாவட் டத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று இல்லா மாவட்டமாக மாறியுள்ளது. தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
இதேபோல், பொருளாதார தட்டுப் பாடு ஏற்பட்டுள்ள பல்வேறு தரப் பிற்கும் நிவாரணப் பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நீலகிரி மாவட்டத்திலுள்ள 8 முதியோர் காப்பகங்களிலுள்ள முதியோர்களுக்கு உதவும் வகையில், உதகை ஊராட்சி ஒன்றியத்தின் சார் பில், நிவாரணப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு காய்கறிகள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் கெட்சி லீமா அமாலினி, உதகை வட் டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் கிருஷ் ணன், எப்பநாடு ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.