tamilnadu

img

பணியிடங்கள் குறைப்பதை கைவிடுக கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

உதகை, ஆக 20 - கூட்டுறவு நிறுவனங்களில் பணியி டங்கள் குறைப்பதை கண்டித்து தமிழ் நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத் தினர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு நிறுவனங்களில் துறை சீர மைப்பு என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு 636 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  கூட்டுறவு துறை அலுவ லகங்களிலும், களப்பணிகளிலும் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு பணிபுரியும் ஊழி யர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் மேலாண்மை இயக்குனர் பணியிடங்களை நிலை உயர்வு செய்வதன் மூலம் 32 துணைப் பதிவாளர் மற்றும் 54 கூட்டுறவு சார்பதி வாளர் பணியிடங்களை குறைக்கும் நட வடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

இதனைக்கண்டித்தும், இத்தகைய பணி யிடங்கள் குறைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர்.  இதன்ஒருபகுதியாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சார் பதிவாளர் மற்றும் இணைப்பதிவாளர் ஆகிய அலுவலகங்க ளில் பணிபுரியும் கூட்டுறவு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய் யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.