உதகை, ஆக 20- பாளையவாரியத்தில் புற்று நோயால் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தினரை ஊழியர் குடியி ருப்பிலிருந்து காலி செய்ய வற்பு றுத்தி அராஜகமான முறையில் நடந்து கொண்ட நிர்வாகத்தை கண் டித்து பாளையவாரிய ஊழியர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர். குன்னூர் வெலிங்டன் அருகே பாளையவாரியம் உள்ளது. இங்கு பணிபுரிந்த ஊழியர் பரமேஸ்வரன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு இன்று வரை ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்கள் எதையுமே பாளையவா ரியம் வழங்காமல் இழுத்தடித்து வரு கிறது. மேலும், கொரோனா ஊர டங்கு நிலையையும் பொருட்ப டுத்தாமல் அவர்கள் குடியிருந்து வரும் ஊழியர் குடியிருப்பை உடனே காலி செய்ய வேண்டும் என்று பாளைய நிர்வாகம் அராஜக மான முறையில் நடந்து கொண்டுள் ளது. இதனைக் கண்டித்தும், ஓய்வூதி யம் உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும் பாளைய வாரிய ஊழி யர்கள் சங்கத்தினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் தலைவர் பி.சி.அசோகன், செய லாளர் சர்வேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இத னைத்தொடர்ந்து சம்பவ இடத் திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். இதில், ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை இறந்த ஊழியரின் குடும்பத்தி னர் ஊழியர் குடியிருப்பில் குடியி ருக்கவும், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைக்க நடவ டிக்கை எடுப்பதாகவும், நிலுவை யில் உள்ள ஊழியர்களின் கோரிக் கைகள் மீது ஆகஸ்ட் 28 ஆம் தேதி யன்று தொழிற்சங்க நிர்வாகிகளு டன் பேச்சுவார்த்தை நடத்திடவும் வாரிய அதிகாரி உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து போராட் டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இந்த போராட் டத்தை சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பத்ரி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கிளை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் வெல்லிங்டனில் உள்ள பாளைய வாரியத்தில் பணிபுரிந்து உயிரிழந்த பரமேஸ்வரனின் குடும்பத்தினருக்கு நிகழ்த்தப்பட்ட அராஜக செயலுக்கு நீலகிரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ட னம் தெரிவித்துள்ளது. மேலும், இச்செயலில் ஈடுபட்ட அதிகாரி கள் மீது பேரிடர் மேலாண்மை சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கட்சியின் மாவட்ட செய லாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் காவல் கண்காணிப் பாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.