உதகை,ஜூன் 5- உதகையில் பல ஆண்டுகளாக செயள் பட்டு வந்த டாஸ்மாக் குடோன், குன்னூ ருக்கு மாற்றப்பட்டதால் அரசுக்கு பெறும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதனை மீண்டும் உதகை பகுதிக்கே மாற்ற வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை விடுத் துள்ளது.
இதுகுறித்து சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜெ. ஆல்தொரை, மாவட்ட ஆட்சி யருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது, நீலகிரி மாவட்டத்தில் அரசு மதுபானம் இருப்பு வைக்கப்படும் கிடங்கு கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை உதகை பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு துறைக்கு சொந் தமான இடத்தில் செயல்பட்டு வந்தது. இந் நிலையில் மேற்படி கிடங்கு குன்னூர் பகுதி யில் உள்ள வண்டி சோலை என்னும் இடத்திற்கு திடீர் என மாற்றப்பட்டது. மாவட்டத்தில் பந்தலூர், எருமாடு முதல் மஞ்சூர், கிண்ணகொரை வரை உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளுக்கும் இந்த இடத்தில் தான் மதுபானம் இருப்பு வைக்கப்பட்டு, ஒவ்வொரு மது விற்பனை கடைக்கும் அனுப்பப்படுகிறது. இதனால் சரக்கு எடுக்க வரும் பணியா ளர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள் ளது. அதோடு மட்டுமல்லாமல் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனத்திற்கு பயண தூரத் திற்கு ஏற்ப கூடுதலாக வாடகையும் கொடுக்க வேண்டியுள்ளது.
மேலும், ஏற் கனவே உதகையில் இருந்த அரசு கூட்டுறவு கிடங்கிற்கு மாத வாடகையாக ரூ. 25 ஆயிரம் மட்டுமே டாஸ்மாக் நிறுவனம் வழங்கி வந் தது. தற்போது வண்டி சோலையில் உள்ள தனியார் கிடங்கிற்கு ரூ. 1 லட்சத்து 75ஆயி ரம் மாத வாடகையாக வழங்கப்படுவதாக தெரிகிறது. மிகக்குறைந்த மாத வாடகை யில் செயல்பட்ட கிடங்கு தற்போது ஆறு மடங்கு கூடுதலான மாத வாடகை உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அர சுக்கு மாதந்தோறும் வருவாய் இழப்பு ஏற் படுகிறது. எனவே, உடனடியாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற் கொண்டு டாஸ்மாக் குடோனை மீண்டும் உதகைக்கே மாற்றி அமைக்க வேண்டு மென அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.