உதகை, பிப். 9- உதகையில் பாதாள சாக் கடை மூடியை சரிப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். நீலகிரி மாவட்டம், உத கையில் 21வது வார்டு சன் மேரிஸ் ஹில் பகுதி யில் 500க்கும்மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஜெபக்கூடம் ஒன்று உள்ளது. இந்நி லையில் இவ்வழியாக உள்ள நடைபாதையில் பாதாள சாக்கடையின் மேற்பரப்பு மூடியில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நடைபாதையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் விபத்துகள் ஏற்பட வாய்புள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக ளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவ டிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பெரும் விபத்து ஏற்படும் முன் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.