உடுமலை, நவ. 4- ஆசிய-பசிபிக் பிராந்திய பொருளாதார ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திடு வதைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் திங்களன்று உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 44 நாடு களுடன் பொருளாதார ஒப்பந்தத் தில் கையெழுத்திட உள்ளது. இதனால் விவசாயிகள் விளை விக்கும் அனைத்துப்பொருட்க ளும் பன்னாட்டு நிறுவனங்களால் எவ்வித இறக்குமதி வரியுமின்றி இந்திய சந்தைகளில் இறக்குமதி செய்யப்படும். மேலும் பால் மற்றும் பால் பொருட்கள் , இறைச்சி, தானியங்கள், பழங்கள் மற்றும் உணவு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் இறக்கு மதி செய்யப்படும் சூழல் ஏற்ப டும். இதனால் இந்திய நாட் டின் விவசாயம் பாதிப்பிற்குள்ளா கும். இந்திய சந்தை முழுவதும் அந்நிய நாடுகளின் கைகளுக் குச் சென்று விடும். எனவே, மத்திய அரசு ஆசிய-பசிபிக் பிராந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் உடும லையில் ஒன்றியத்தலைவர் ராஜ கோபால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்ட துணை செயலாளர் பாலதண் டபாணி, மாவட்ட துணைத் தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம், குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் லட்சுமணசாமி, ஸ்ரீதர், திருமலைசாமி, சுந்தா்ராஜ் மற்றும் மடத்துக்குளம் கார்த்தி கேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப் பினர்.