உதகை, ஆக. 24 - ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத் திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீலகிரி மாவட் டத்தில் வரும் 31 ஆம் தேதி (திங்கட்கிழமை) ஓணம் பண்டி கையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள் ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அரசுப் பாது காப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். 31 ஆம் தேதியை ஈடுசெய்ய, வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி இம் மாவட்டத்திற்கு பணி நாளாக இருக்கும், இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.