உதகை, அக்.12- கேரள மாநிலம் வயநாட்டில் நடை பெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற கோத்தகிரி மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நீலகிரி மாவட்டம்,கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட சுள்ளிகூடு மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் டி.அபினவ். இவ ரது தந்தை கூலித் தொழிலாளியான தர்நேஷ். இவர்கள் கோத்தகிரி தேனாடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஓம் நகர் பகுதியில் வசித்து வருகின் றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதி யில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மாணவன் டி.அபினவ் கலந்து கொண்டு ஒரு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார். இந்நிலையில் தங்கம் வென்ற மாணவன் அபினேஷை ஊக்கப்ப டுத்தும் வகையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோத்தகிரி இடை கமிட்டிகளின் சார்பில் வெள்ளியன்று சுள்ளிகூடு அரசு மேல்நிலைப்பள்ளி யில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை ஆசிரி யர் அர்ஜுனன் முன்னிலை வகித் தார். இதில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகி கள் உள்ளிட்டோர் பங்கேறு வாழ்த்தி பேசினர். முன்னதாக, தங்கம் வென்ற மாணவன் டி.அபினவுக்கு, இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜ் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். மேலும், இவ்விழாவில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் கோத்த கிரி இடைகமிட்டி செயலாளர் மணி கண்டன் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பாளர் குமரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.