உதகை, பிப். 15- வங்கி கொள்ளையர்களை கண்டறிய கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று வங்கி மேலாளர்களிடம் காவல் துறையினர் சார்பில் அறிவுறுத்தப் பட்டது. உதகை ஊரக காவல் உட்கோட்டத்தின் சார்பில் வங்கி கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களை எளிதில் கண்டறிய வும், வங்கிக் கொள்ளையை தடுத்திடவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் சனியன்று நடைபெற்றது. மஞ்சூர் எச்கேடி மண்டபத் தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் தவ்லத் நிஷா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் வங்கி களில் கட்டாயம் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். அதேபோல் இரவு நேர காவலர்களாக இருவரை நிய மிக்க வேண்டும். வங்கிகளில் அதிக அளவில் பணம் செலுத்துவதற்கும், எடுப்பதற்கும் வருபவர்கள் இரண்டு நபருடன் கட்டாயம் வரவேண்டும். மேலும், வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் ஆன்லைன் மோச டிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங் கிகள் உள்ளிட்ட வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.