உதகை,பிப்.26- குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தில்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடை பெற்று வந்த நிலையில் சங்பரி வார் அமைப்பினரால் நடத்தப் பட்ட கொடிய வன்முறையை கண்டித்து அனைத்து கட்சியி னர் சார்பில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அமைதியான முறையில் ஷாகின்பாத் பகுதியில் போராட்டம் நடத்தி வந்த மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்கு தலை நடத்திய சங்பரிவார் அமைப் பினரைக் கண்டித்தும், வன்முறை யில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நீலகிரி மாவட்டம், எருமாடு பஜாரில் செவ்வாயன்று அனைத்து அரசியல் கட்சியினர் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் இடைக் கமிட்டி செயலாளர் கே.ராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ் கரன் துவக்கி வைத்து பேசினார். காங்கிரஸ் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம்.வர்கீஸ், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பி னர் எம்.எம் ஹனிபா மாஸ்டர், சேரங்கோடு ஊராட்சி துணைத் தலைவர் சந்திரபோஸ், ஊராட்சி வார்டு உறுப்பினர் பிரவீன், முஸ்லீம் லீக் மாவட்டக் குழு உறுப்பினர் அப்துல்மஜீத், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இடைக்குழுச் செயலாளர் பி.கே.பிலிப் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இப்போராட் டத்தில் அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி னர். முன்னதாக பள்ளி சந்திப்புப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக் கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதனைத்தொ டர்ந்து, எருமாடு காவல்துறையி னர் இப்போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியின் தலைவர்கள் மீது இருபிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நீலகிரி மாவட்டக்குழு வன் மையான கண்டனத்தை தெரிவித் துள்ளது.