tamilnadu

img

ஊடகத்தினர் மீது அதிகரித்துவரும் போலீஸ் தாக்குதல்கள் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டனப் பேரணி

புதுதில்லி, டிச.22- ஊடகத்தினர் மீது நாட்டின் பல்வேறு பகுதி களிலும் அதிகரித்துவரும் போலீசாரின் தாக்கு தலைக் கண்டித்து, புதுதில்லியில் இயங்கும் கேரள உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங் கத்தின் சார்பில் கண்டனப் பேரணி நடை பெற்றது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதி ராக நாட்டின் பல பகுதிகளிலும் கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. இதனைப் பதிவு செய்தி டும் நிருபர்கள், வீடியோ இதழியலாளர்கள் மீது காவல்துறையினர், குறிப்பாக பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்கும் தில்லி, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேச காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். இதனைக் கண்டித்து கண்ட னப் பேரணி நடைபெற்றது. இக்கண்டனப் பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கேரள உழைக்கும் பத்திரி கையாளர்கள் சங்கத்தின் தில்லிக் கிளை தலைவர் மிஜி ஜோஸ், தில்லி பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் ஜிகீஷ் ஏ.எம், இந்திய மகளிர் பத்திரிகையாளர் அணி முன்னாள் தலைவர் டி.கே. ராஜலட்சுமி, பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா துணைத் தலைவர் ஷாகித் அப்பாஸ் முதலானவர்கள் கண்டனை உரை நிகழ்த்தினார்கள். சீத்தாராம் யெச்சூரி பேசும்போது, “நிரு பர்கள் மீதான வன்முறை வெறியாட்டங்கள் குறித்த செய்திகள் பாஜக ஆளும் மாநிலங்களி லிருந்து வந்து கொண்டிருக்கின்றன. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அநேகமாக இவை அமைதியாகவே இருக்கின்றன. சனிக் கிழமை (டிசம்பர் 21) பீகாரில் மாபெரும் அள வில் பந்த் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வன்முறை தொடர்பாக ஓர் அறிக்கை கூட இது வரை வரவில்லை. எனவே இதிலிருந்தே வன் முறையைத் தூண்டுபவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறினார்.  (ந.நி.)