இந்த வருடம் முழுவதும் ரேசன் கடைகளில் மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு இலவ சமாக வழங்க வேண்டும். நுண்நிதி நிறுவனங்கள் அடாவடியாக கடன் தவணை வசூலிப்பதை தடுத்திட வேண்டும் என வலியுறுத்தி கூடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.ஏ.சாந்தா, மாவட்டத் துணைத் தலைவர் லீலா வாசு, சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.