ரேசன் கடைகளில் ஆகஸ்ட் மாதம் இலவசப்பொருட்கள் கிடை யாது என்று தமிழக அரசு அறி வித்துள்ளது.
பெருங்கடல் தொழில்நுட்பத்திற் காக தமிழக விஞ்ஞானிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தங்கம் கடத்தல் விவ காரத்தை தொடர்ந்து தமிழக த்திலும் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அனில் அம்பானி வாங்கிய 2,800 கோடி ரூபாய் கடனுக்காக மும்பையிலுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம் கையகப்படுத்தப்படும் என ‘யெஸ்’ வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் கடே ஸ்வரா கோவிலில் இருந்து திருடிச் செல்லப்பட்டு சட்டவிரோத மாக வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட நடேசர் சிலை 22 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவிற்கு எடுத்து வரப்பட உள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ் பதிவேற்றும் பணிகளை கை பேசி அல்லது கணினி மூலம் வீட்டில் இருந்தே மேற்கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத் தின் கீழ் செயல்படும் 5 சுங்கச்சா வடிகளில் 126 நாட்களுக்கு பிறகு மீண்டும் கட்டணம் வசூல் தொடங்கப் பட்டுள்ளது.
கன்னியாகுமரி குழித்துறையில் முன்னாள் முதல்வர் அண்ணா சிலை மீது காவிக் கொடி கட்டி அவ மதிப்பு செய்ததற்கு துணை முதலமை ச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலை வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்சநீதிமன்றத் தில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
தில்லியில் டீசல் மீதான வாட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 16.75 சத வீதமாக குறைத்து அம்மாநில முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட் டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில காங் கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தில்லியில் உள்ள அரசு பங்களாவிலிருந்து காலி செய்துள்ளார்.
ஆகஸ்ட் 3 திங்கட்கிழமை முதல் தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.