tamilnadu

கொரோனா வறுமை – தற்காலிக வேலைக்கு சென்ற கல்லூரி மாணவன் பலி

உதகை, ஜூன் 4- நீலகிரி மாவட்டம், கைகாட்டி அருகில் உள்ள தேவர் சோலை எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தோட்ட தொழிலாளி சுசீலா.  இவருக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் கார்த்திக் (19) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். ஊரடங்கு பாதிப்பால் வேலை யிழந்த இவர்களின் குடும்பம் வருமானம் இல்லாமல் தவித்து வந்த நிலையில், அருகில் உள்ள  தனியார் தேயிலை தொழிற் சாலை ஒன்றில் கார்த்திக் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், செவ்வாயன்று தொழிற்சாலையில் 60 அடி உயரத்தில் நின்று கொண்டு பணிபுரிந்து கொண்டி ருந்த கார்த்திக் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந் தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காந்தள் காவல் துறையினர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு உதகை அரசு தலைமை மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.