உதகை, பிப். 8- மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து குன்னூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடா ளுமன்றத்தில் தாக்கல் செய்த தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் தொழிலா ளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம், குன்னூர், விபி தெருவில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜெ.ஆல்தொரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரமேஷ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்டப் பொருளாளர் ஏ.நவீன் சந்திரன், மாவட்ட உதவி செயலாளர்கள் முகமது ரஃபிக், ரமேஷ், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் வட்ட கிளை செயலா ளர் பொ. ராமன் குட்டி, ஸ்டெர்லிங் பயோடெக் ஊழி யர் சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜரத்தினம், குன்னூர் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரஃபிக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசின் தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண் டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.