tamilnadu

img

அங்கீகாரத் தேர்தலில் அமோக வெற்றி  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் கொண்டாட்டம் 

 உதகை, செப்.19- பிஎஸ்என்எல் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து உதகையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் உற்சாகமாக கொண்டாடினர். பிஎஸ்என்எல் நிறுவன தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 18 சங்கங் கள் போட்டியிட்ட நிலையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் 46 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தொடர்ந்து 7 ஆவது முறையாக அமோக வெற்றி பெற்றது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் 108  வாக்குகள் பெற்று 2002 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆவது முறையாக வெற்றி பெற்றுள் ளது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வெற்றி பெற்றதை தொடர்ந்து உதகையில் உள்ள பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு சங்கத்தின் சார்பில் வாயிற்கூட்டம் கூட்டம் நடத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த வாயிற்கூட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் எ.அந்தோணிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எல்.கிறிஸ்டோபர், மாவட்ட நிர்வாகி டி.விஜயகுமார், கிளை செயலாளர் ஆர்.பசுபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில், ஒப்பந்த ஊழியர் வினோத் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.